ஆழி & ஆதியோர்களின் அவதார்கள்
.பி. 2024ஆம் ஆண்டில், நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் விண்ணவம் எனும் ஐம்பூதங்களை கட்டுப்படுத்தும் வல்லமைக் கொண்ட முன்னோர்களின் வழிவந்தவர்களில் ஆறு குழந்தைகள், தாங்கள் ஆதியோக்களின் அவதார்களும் என்பதை அறிந்துக் கொள்கிறார்கள். அதோடு, அவர்கள் மேம்பட்ட பண்டைய அறிவும் நவீன தொழில்நுட்பமும் இணைந்து உருவான, பொன்மயமான விண்ணகரமான குமேருவுக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
அங்கு, பகவான் பரசுராமர் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், மறைந்துபோன அறிவுகளை கற்றுக் கொண்டு, தங்களின் மூல பூதங்களை முழுமையாக ஆளக் கற்றுக்கொள்கிறார்கள்.
பயிற்சியில் அவதார்கள் முன்னேறிக் கொண்டிருக்கும்போது, அவர்கள் எதிர்பாராத விதமாக பல்வேறு உலகங்களுக்கு இடையே தள்ளப்படுகிறார்கள். அந்தப் பயணங்களின் வழியாக, பல உலகங்களில் மனிதர்களைப் போன்ற பல இனங்கள் இருப்பதும், அவற்றின் தோற்றம் குறித்த மறைக்கப்பட்ட வரலாறும் அவர்களுக்கு வெளிப்படுகிறது.
விரைவில், அவர்கள் ஒரு பெரும் அச்சுறுத்தலில் சிக்கிக் கொள்கிறார்கள். அதிலிருந்து அவர்கள் எவ்வாறு தப்பிப்பார்கள்? அதை உருவாக்கியது யார்? ஏன்?
இந்த மர்மங்களைக் களமிறக்கும் மாபெரும் பெருங்காப்பிய அதிபுனைவு புதினமே “ஆழி & ஆதியோர்களின் அவதார்கள்”