மச்சவதார் & குமரிக்கண்டத்தின் வீழ்ச்சி
கிமு 10,000; பனியுகத்தின் முடிவின்போது, இன்னும் 21 நாட்களில் குமரிக்கண்டத்தின் தென் முனையில் ஒரு நுண்கோள் மோதப் போவதாகக் குமேரியர்களுக்கு உருவிலி வருவதுரைத்தது.
அந்த மோதல், கடவுள்களால் கட்டப்பட்ட சொர்க்கமான குமேரு நகரம் உட்பட, பூமியின் பெரும்பாலான நிலப்பரப்பை அழிக்கும் பேராபத்தை உருவாக்கும் அபாயம் கொண்டதாக இருந்தது. இந்தப் பேரழிவு, பெரும்பாலான உயிரினங்களின் அழிவுக்கு வழிவகுக்கும்.
மக்களையும் மற்ற உயிரினங்களையும் காப்பாற்ற, காக்கும் கடவுளின் அவதாரமான மச்சன் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், குமேரியர்கள் நுண்கோள் பூமியை மோதுவதற்கு முன்பே அதனை ஏவுகணைகளால் தாக்கி, அதன் சிதறலால் ஏற்படும் பெருவெள்ளத்திலிருந்து தப்பிக்க நாவாய்களை கட்டுகின்றனர்.
மச்சனும் குமேரியர்களும் அந்தச் நுண்கோளை அழித்து உயிர்களை காப்பாற்றி ஒரு புதிய நாகரிகத்தின் விதையை விதைப்பார்களா, அல்லது அந்த முயற்சியிலேயே அழிவைச் சந்திப்பார்களா?
இந்த பரபரப்பான கதையைக் கூறும் மாபெரும் பெருங்காப்பிய அதிபுனைவு புதினமே ”மச்சவதார் & குமரிக்கண்டத்தின் வீழ்ச்சி”.